மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை !
மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், தேவையின்றி வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என்றும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பல்வேறு நகரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று இரவும், இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது.
இந்த கனமழையால் குர்லா, சியான், தாதர் மற்றும் பரேல் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வாகன போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், தேவையின்றி வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது