இந்திய விமானப்படை மற்றும் ராணுவ தளங்களை பாதுகாத்த அனைத்து வீரர்களுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த வாரம் வரை போர் பதற்றம் நிலவி வந்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வந்தது.
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு தக்க பதிலடியை இந்திய ராணுவம் தொடர்ந்து கொடுத்துவந்தது.
இந்நிலையில்,பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ தளங்களை பாதுகாத்த அனைத்து வீரர்களுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் போர் நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி பஞ்சாபில் உள்ள உன்சி பஸ்சி மற்றும் காஷ்மீரின் பதன்கோட் விமானப்படை தளங்ளுக்கு சென்று பிஎஸ்எப் வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர் ”ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, விமானபடைதளங்களை மற்றும் ராணுவ தளங்களை பாதுகாத்த ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு பாராட்டுகள். ராணுவம் மற்றும் விமானப்பட தளங்களில் உள்ள முக்கியமான சொத்துகளை குறிவைத்து தாக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்ததற்கும் பாராட்டு. ராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.





















