ஆந்திரத்தில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் கண்டோன்மென்ட் கீழ் உள்ள துவாரபுடி அருகே 8 வயதான உதய் , சாருமதி , 6 வயதான கரிஷ்மா, மானஸ்வி ஆகியோர் விளையாட வெளியே சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவுகள் பூட்டப்படாததால், விளையாட்டு போக்கில் அவற்றைத் திறந்து வாகனத்தில் ஏறியுள்ளனர்.
பின்னர் கதவுகள் தற்செயலாகப் பூட்டப்பட்டு, அவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதில் காருக்குள் சிக்கிக்கொண்ட குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனிடையே, நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் அவர்களைத் தோடியபோது காருக்குள் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.