2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரின் பின்னணியில், உலகின் கண்கள் மீண்டும் ஒருமுறை காசா மீதே திரும்பியுள்ளன. ஆனால், இந்தப் போரின் கீழ் பொலிவிழந்து கிடப்பது பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள்.
பசிக்கு பெயர் காசா!
ஐநாவின் சமீபத்திய அறிக்கைகளின் படி, தற்போது காசா பகுதியில் 23 லட்சம் மக்கள் கடுமையான பட்டினியில் உள்ளனர். உணவின்றி தவிக்கும் மக்கள் உணவுக் கிடைக்கின்ற யாரிடமாவது கேட்டால் அதற்கு பதிலாக ,“இது வெறும் பசியல்ல… உயிரை குடிக்கும் பசி”.
மூடப்பட்ட எல்லைகள் – முடங்கிய வாழ்வு
இஸ்ரேலின் முற்றுகை நடவடிக்கையின் காரணமாக காசாவின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள், மருந்துகள், குடிநீர், மின் சந்தை போன்ற அடிப்படை தேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, பல மருத்துவமனைகள் இயங்க முடியாமல் முடங்கிவிட்டன.
மனிதாபிமான சட்டங்களை மீறும் தாக்குதல்
அளவுக்கு அதிகமான வன்முறைகள், பொதுமக்கள் மீது செய்யப்பட்ட தாக்குதல்கள், சிறுவர்கள் கூட கொல்லப்பட்ட நிலைமை – இவை அனைத்தும் மனிதாபிமான சட்டங்களை எளிதில் மீறுகின்றன. இது உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்தாலும், தீர்வுகள் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை.
உலகம் ஏன் மௌனமாக இருக்கிறது?
பல நாடுகள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன. ஆனால், பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் தாமதமாகவே வருகின்றன. ஐநாவின் உணவுப் பாதுகாப்பு அமைப்புகள் கூட நிவாரணங்களை கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றன.இந்தச் சூழ்நிலையில், மனிதாபிமானக் கடமை என்பது உணவைக் கொண்டு செல்வதிலுமட்டுமல்ல. கொடுமையான போரை நிறுத்த வலியுறுத்துவதும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வற்புறுத்துவதும் முக்கியமானது.
முடிவாக…
காசா ஒரு போர் நிலமாக மட்டும் காணப்படக்கூடாது. அது மனிதர்கள் வாழும் மண். அங்கே பசி மட்டும் இல்லை. பசியை உண்ணும் கொடுமை, உயிரை குடிக்கும் துன்பம், மரண பயம் – இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்கின்றன.
உலகம் பார்ப்பதற்காக அல்ல, பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்தக் கொடுமைகள் அனைத்தும் இங்கு எந்தவித ஒலிவு மறைவும் இன்றி சொல்லப்படுகின்றன