அயோத்தி சென்று பக்தர்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு!
மத்திய அமைச்சர்கள் தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று பக்தர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டாம்’ என பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று(ஜன.,24) நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, தற்போது அமைச்சர்கள் யாரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டாம். அங்கு, கூட்டம் அதிகளவில் உள்ளது. மத்திய அமைச்சர்கள் செல்லும் போது பக்தர்கள் தரிசனம் தடைபடும். இதனால், மத்திய அமைச்சர்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு ராமர் கோவிலுக்கு செல்லலாம் என அறிவுரை வழங்கினார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




















