உலக சாதனை படைத்த டிஜிட்டல் ஊடகம் “ஜனநாயகன்” – இப்போது இருமொழி மாத இதழாக!
சென்னை – உலக சாதனை படைத்த பிரபல டிஜிட்டல் செய்தி ஊடகமான “ஜனநாயகன்”, இப்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் வெளிவரும் மாத இதழாக உருவெடுக்கிறது.
இந்த மாத இதழ், இந்திய அரசின் பதிப்பகப் பதிவாளர் (Press Registrar General of India) மூலம் பதிவுசெய்யப்பட்டு, நிரந்தர பதிவு எண் TNBIL/25/A0853 என்ற பெயரில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
இணையதளத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜனநாயகன், இப்போது மாத இதழாக வெளிவருவது, மக்களின் குரலை மேலும் வலிமையாக்கும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.
நிறுவனர் மற்றும் பதிப்பாளர் ஆசிரியர் சமரன் கூறியதாவது:
“ஐந்து ஆண்டுகளாக இணைய ஊடகத்தில் தனித்துவத்துடன் செயல்பட்டு, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்று, உலக சாதனை படைத்த ‘ஜனநாயகன்’, தற்போது அடுத்த கட்டமாக இருமொழி மாத இதழாக விரைவில் வெளிவர உள்ளது. உலகில் ஒரே நபரால் இயக்கப்படும் ஊடகமாக ஜனநாயகன் திகழ்வதை பெருமையுடன் அறிவிக்கிறேன்.”
முதல் வெளியீடு விரைவில் வரவிருக்கிறது. இதில் அரசியல், கலாசாரம், சமூக நீதி உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்பான கட்டுரைகள், முக்கிய நபர்களின் நேர்காணல்களும் செய்திகளும் இடம் பெறவுள்ளன.
மேலும் தகவல்களுக்கு மற்றும் சந்தா பதிவு செய்ய:
📧 [email protected]
📞 93448 13663























