• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result

Home Uncategorized

திருநெல்வேலியில் அமித் ஷா உரை: தமிழக அரசியல் மற்றும் திமுக மீது கடும் விமர்சனம்

By Samaran

by Jananaayakan
August 22, 2025
in Uncategorized
0
திருநெல்வேலியில் அமித் ஷா உரை: தமிழக அரசியல் மற்றும் திமுக மீது கடும் விமர்சனம்
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலியில் அமித் ஷா உரை: தமிழக அரசியல் மற்றும் திமுக மீது கடும் விமர்சனம்

திருநெல்வேலி, ஆகஸ்ட் 22, 2025: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில், தமிழக அரசியல், திமுக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

RelatedPosts

உலக யானைகள் தினம் 2026: உலக ஆசிய யானைகளில் சுமார் 60% இந்தியாவில் — பாதுகாப்பின் வெற்றிக்குப் பின்னால் பெருகும் மனித–யானை மோதல் சவால்

August 12, 2026
கையுறை இல்லை… முகக்கவசம் இல்லை… பாதுகாப்புக் கவசம் இல்லை: தூய்மைப் பணியாளர்களின் உயிருக்கு யார் பொறுப்பு?

August 9, 2026
தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

June 1, 2026
அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக தகவல் – 50 லட்சம் உறுப்பினர்கள் இலக்கா?

“திருநெல்வேலி மண் வீரம், பண்பாடு, மற்றும் கலாச்சாரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மண்ணைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்ததற்கு பிரதமருக்கு நன்றி. முன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமையும் பாஜக தலைமையிலான கூட்டணியே குடியரசுத் தலைவராக்கியது,” என்று அமித் ஷா பெருமையுடன் குறிப்பிட்டார்.

திமுக மீது கடும் தாக்கு
வரவிருக்கும் தேர்தலில் திமுகவை “வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்” என்று கூறிய அமித் ஷா, திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். “தமிழக அமைச்சர்கள் பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பல மாதங்களாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஆட்சியாளர்களாகவும் இருக்க வேண்டுமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், 130-வது சட்டத்திருத்தத்தை “கறுப்பு சட்டம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்ததற்கு பதிலளித்த அமித் ஷா, “அதை சொல்ல ஸ்டாலினுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏனெனில், அவர் கறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்,” என்று கடுமையாக தாக்கினார்.

*காங்கிரஸ் மற்றும் திமுகவின் கனவுகள்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் ஒரே லட்சியம் ராகுல் காந்தியை பிரதமராக்குவது என்றும், அதேபோல திமுகவின் கனவு உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவது என்றும் கூறிய அமித் ஷா, “இந்த இரண்டு கனவுகளும் ஒருபோதும் நிறைவேறாது,” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

என்டிஏ-வின் வெற்றி உறுதி
வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மாபெரும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அமித் ஷா, பாஜகவின் பூத் பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்தினார். “நாம் ஒன்றிணைந்து பணியாற்றி, தமிழகத்தில் என்டிஏ-வின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த மாநாட்டில் பாஜகவின் முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். அமித் ஷாவின் உரை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ShareTweetShareSend
Previous Post

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டியது என்டிஏ கூட்டணியின் பொறுப்பு: அண்ணாமலை

Next Post

தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு புள்ளிவிவரங்களே சான்று: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Related Posts

உலக யானைகள் தினம் 2026: உலக ஆசிய யானைகளில் சுமார் 60% இந்தியாவில் — பாதுகாப்பின் வெற்றிக்குப் பின்னால் பெருகும் மனித–யானை மோதல் சவால்
Uncategorized

உலக யானைகள் தினம் 2026: உலக ஆசிய யானைகளில் சுமார் 60% இந்தியாவில் — பாதுகாப்பின் வெற்றிக்குப் பின்னால் பெருகும் மனித–யானை மோதல் சவால்

August 12, 2026
கையுறை இல்லை… முகக்கவசம் இல்லை… பாதுகாப்புக் கவசம் இல்லை: தூய்மைப் பணியாளர்களின் உயிருக்கு யார் பொறுப்பு?
Uncategorized

கையுறை இல்லை… முகக்கவசம் இல்லை… பாதுகாப்புக் கவசம் இல்லை: தூய்மைப் பணியாளர்களின் உயிருக்கு யார் பொறுப்பு?

August 9, 2026
தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?
Uncategorized

தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

June 1, 2026
அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக தகவல் – 50 லட்சம் உறுப்பினர்கள் இலக்கா?
Uncategorized

அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக தகவல் – 50 லட்சம் உறுப்பினர்கள் இலக்கா?

June 1, 2026
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் விஜய் தலைமையிலான TVK – 15% வாக்குப் பங்கு சாத்தியமா?
Uncategorized

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் விஜய் தலைமையிலான TVK – 15% வாக்குப் பங்கு சாத்தியமா?

February 21, 2026
இந்தியாவிலேயே முதல் முறை! திருவண்ணாமலை அரசு பள்ளி மாணவி கவிதாவின் கடல்சார் பல்கலைக்கழக சாதனை!
Politics

July 5, 2025
Next Post
தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு புள்ளிவிவரங்களே சான்று: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு புள்ளிவிவரங்களே சான்று: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமலாக்கத்துறை நடவடிக்கை அச்சத்தால் வழக்குப்பதிவு – தவெக பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

அமலாக்கத்துறை நடவடிக்கை அச்சத்தால் வழக்குப்பதிவு - தவெக பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

நேபாளத்தில் என்ன நடக்கிறது? ஜென் Z-யின் கோபம்: சமூக ஊடகத் தடை முதல் பிரதமரின் ராஜினாமம் வரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை நிர்வாகத்தைச் சுற்றி எழும் தீவிர குற்றச்சாட்டுகள் – நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

1
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

Recent News

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions