திருச்சி உறையூர் பி.ஆர்.தேவர் இல்லத்தில் பசும்பொன்தேவர் 1960 முதல் 1962 ஜனவரி 13 வரை தங்கி இருந்தார். அந்த இல்லத்தில் தான் சிவாஜி கணேசனை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் சந்தித்தார் அரை மணி நேரம் இருவரும் உரையாடினர்.
சிவாஜி கணேசன் தன்னை சந்திப்பது செய்தியாக சொல்லக்கூடாது போட்டோ எடுக்கக்கூடாது என்று தேவர் நிபந்தனை விதித்தார்.அவர் காமராஜோடு இருக்கிறார் என்னை சந்தித்த செய்தி வெளியானால் அவரது தொழிலுக்கு இடையூறு என்று தேவர் சொன்னார்.
அதன்படி தேவரை தரிசிக்க சிவாஜிகணேசன் வந்தார்.
அவர்கள் இருவரும் அறியாவண்ணம் இந்தப்படம் எடுக்கப்பட்டது. வெளியிடப்படாமல் வைக்கப்பட்டிருந்தது.
தேவர் அவர்கள் அறையில் இருந்த அந்த நாற்காலியையும், புகைப்படங்களையும் பி.ஆர்.தேவரின் பேரன் ரத்னவேலுத்தேவர் பாதுகாத்து வருகிறார்.
இந்த இல்லத்தில் தேவரை சந்தித்ததாக
திமுக வின் எஸ்.எஸ்.தென்னரசு ஆனந்தவிகடனில் 1989 ல் எழுதினார்.
ஊஞ்சலே இல்லாத வீட்டில் தேவர் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார் என்று கதை எழுதியிருப்பார்.
தேவர் மறைந்த பின்பு தேவரோடு இணக்கமாக இருந்ததாக கதைவிடுவது திமுகவினருக்கு வழக்கம்தானே.
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் மீது நடிகர் சிவாஜி கணேசன் உயிரையே வைத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.. பின் நாட்களில் தேவர் மகன் திரைப்படம் நடிக்கும் போது தேவர் ஐயாவை பற்றி கமல்ஹாசனிடம் அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் மெய்சிலிர்க்க வைத்ததாக கமல் அவர்கள் ஒரு பத்திரிக்கைக்கு நேர்காணல் கொடுக்கும் போது அப்போதே தெரிவித்திருக்கிறார்.
தேவர் வாழ்க.. தேவர் புகழ் வாழ்க..