தமிழக சட்டமன்றத்தின் மரபு குறித்து கடந்த ஆண்டே சபாநாயகர் ஆளுநருக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். தென் மாநில ஆளுநர்களின் செயல்பாடுகளை இந்திய மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். உண்மைகளை ஏற்கும் மனப்பக்குவம் ஆளுநருக்கு இல்லை.
ஆளுநர் மனசாட்சிக்கு விரோதமாக அறிக்கை இருக்கிறது என சொல்லி இருக்கலாமே? ஆளுநர் பதவிக்கு மரியாதை கொடுக்க முதல்வர் நினைப்பதால் தான், இதை எல்லாவற்றையும் நாங்கள் தாங்கிக்கொண்டு இருக்கிறோம். தேசிய கீதத்தை பாட கேட்டவர், அதற்கு முன்பாகவே சென்றுவிட்டார்.
ஆளுநர் உரையில் ஒன்றுமே இல்லையா? ஆளுநரை பற்றி எடப்பாடி பேசினாரா? அதிமுக ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா என்றெல்லாம் ஆளுநர் படித்தார். இன்று ஆளுநர் உரையில், அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்து கூறியிருக்கிறோம். ஆனால் அதை படிக்க ஆளுநருக்கு மனமில்லை.
அதிமுகவினருக்கு அன்று டில்லி சாதகமாக இருந்தது. அதனால் ஆளுநரோடு பிரச்சனை இல்லாமல் இருந்தார்கள். எங்களுக்கு டில்லி எதிராக உள்ளது. ஆனாலும் ஆளுநரோடு சமரசமாக செல்ல முதல்வர் விரும்புவதால் தான், ஆளுநர் உரையோடு சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்டோம்: அமைச்சர் ரகுபதி