உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை வழக்கத்தை விட உறை பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. 2.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதால் கடும் குளிரில் மக்கள் வாடி வருகின்றனர்.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு சவரண் ரூ.46,640க்கும், ஒரு கிராம் ரூ.5,830க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.77.50க்கு விற்பனையாகிறது.
கடந்த தேர்தலில் 1.5 லட்சம் ஓட்டுகளில் அதிமுக தோல்வியடைந்தது, அதற்கு காரணம் ஓபிஎஸ் என்ற விஷ நாகப்பாம்பு. அந்தப் பாம்பை ஒழிக்க வேண்டும், அதற்காகத்தான் அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது: முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பணன்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு ஸ்பெயின் செல்ல உள்ளார். ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள் & அரசு பிரதிநிதிகளை சந்தித்துவிட்டு, பிப்ரவரி 7ம் தேதி சென்னை திரும்புவார்: தமிழக அரசு அறிவிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 556 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70.76 அடியாகவும், நீர் இருப்பு 33.357 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 96 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 1.73 கோடிக்கும் மேற்பட்டோர் 18-19 வயது பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், 47 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூர் காந்தி நகரில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரத்தில் 27 வயதுடைய பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில் மருத்துவமனை தரப்பில் போலீசிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் போக்சோவில் கைதாகியுள்ளார்.
தமிழகத்தில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ரவியே காரணமாக இருந்துக்கொண்டு இருக்கிறார். சென்னை பல்கலைக்கழகம் 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இருப்பதற்கு ஆளுநர் ஆர்.என் ரவியே காரணம்: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைப்பாவை போல் மோடி செயல்படுகிறார். அரசியலைப்பு சட்டத்தை சிதைக்க பாஜக சதி செய்து வருகிறது. நாட்டின் தன்னாட்சி அமைப்புகள் ஒவ்வொன்றையும் பலவீனப்படுத்தும் பணியை பாஜக செய்து வருகிறது: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே