அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், உலக அளவில் 5105 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. பொங்கல் வெளியீடாக கடந்த ஜன. 12ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம்,ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, முதல் நாளில் 317 கோடி வசூலித்து அசத்தியது. இதனால் திருச்சிற்றம்பலம்,வாத்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து இது தனுஷின் 3ஆவது 3100 கோடி திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.
இபிஎஸ் தலைமையில் இயங்கி
வரும் அதிமுகவுடன் அமமுக சேர
வாய்ப்பே இல்லை என டிடிவி
தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களை
சந்தித்த அவர், “இபிஎஸ்க்கு துரோகத்தை
தவிர வேறு எதுவும் தெரியாது.
முதல்வராக அமர்த்தியவருக்கு துரோகம்,
ஆட்சிக்கு பிரச்னை வந்தபோது அதை
காப்பாற்றி கொடுத்தவருக்கு துரோகம், 4
ஆண்டுகளாக ஆட்சித் தொடர காரணமாக இருந்தவர்களுக்கு துரோகம்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
ISSF உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில்,
இந்திய ஜோடி தங்கம் வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையருக்கான
10 மீட்டர் இறுதிப் போட்டியில்,
அர்மேனியாவைச் சேர்ந்த எல்மிரா
கராபெட்டியன்- பெனிக் க்ல்கத்யன்
ஜோடியை, 17-7 என்ற புள்ளிக் கணக்கில்
இந்தியாவின் ரிதம் சங்வான்- உஜ்வல்
அபாரமாக வீழ்த்தியது. மற்றொரு கலப்பு
இரட்டையருக்கான போட்டியில், அர்ஜுன்
பாபுதா- சோனம் உத்தம் மஸ்கர் இணை
வெள்ளி வென்றது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு,
அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள்
கூட்டம் அலைமோதியது. அதிகாலை 3
மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில்
காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
நேற்று (சனிக்கிழமை) 5 லட்சத்துக்கும்
மேற்பட்ட பக்தர்கள் அயோத்தியில் குவிந்துருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார்
20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்
ராமரை தரிசனம் செய்து இருக்கிறார்கள்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘ஜலாலி’ என்ற.இந்தப் பாடலை ஏ.ஆர்.ரகுமான் மற்றும்
சரத் சந்தோஷ் இணைந்து பாடியுள்ளனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்
உருவாகும் இந்தப் படத்தில் ரஜினி சிறப்பு
தோற்றத்தில் நடித்துள்ளார். பிப். 9ஆம்
தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின்
இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம்
சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
2024இல் 400 எம்.பி.க்களையும் தாண்டி,
மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவது
உறுதி என அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார். உளுந்தூர்பேட்டையில்
யாத்திரை மேற்கொண்ட அவர், “தமிழகத்தில் சாமானிய மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக ஆட்சி நடக்கவில்லை. வளர்ச்சியை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும். மோடியை எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் யாரும் இல்லை. மோடிக்கு
எதிராக ஆளுமை தலைவர்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்,இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சாதனை படைக்க உள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், அபாரமாக பந்துவீசிய அவர் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களையும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். இன்னும் 5 விக்கெட்கள்
எடுத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500
விக்கெட்களை வீழ்த்திய 2ஆவது இந்திய
வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இனி நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக நடிகை கத்ரீனா கைஃப் ஓபனாக கூறியுள்ளார். ‘மெரி கிறிஸ்துமஸ்’ பட விழாவில் பேசிய அவர், “நீங்கள் 20 வயதில் இருந்ததுபோல் உங்களின் 30 வயதில் இருக்க முடியாது. சில அனுபவங்களுடன் நீங்கள் முன்னேறி இருப்பீர்கள். வயது அதிகரிக்கும் போது உங்களின் விருப்பங்களும் மாறுபடும்.
நல்ல கதைகள் வந்தால் பீரியட்
படங்களிலும் நிச்சயமாக நடிப்பேன்” என
தெரிவித்துள்ளார்.
ஒரு மகளுடைய மரணத்தை எந்த
தகப்பனாலும் தாங்கிக்கொள்ள முடியாது
என நடிகர் பார்த்திபன் வருத்தம்
தெரிவித்துள்ளார். பவதாரிணி மறைவு
குறித்து பேசிய அவர், “என் மகள் கொஞ்சம் சுருண்டு படுத்தாலே என்னால் தாங்கி கொள்ள முடியாது. அப்படியிருக்கும் போது,
பவதாரிணி மறைவை இளையராஜாவால்
நிச்சயம் தாங்கிக் கொள்ளவே முடியாது.
எனக்கு வேதனையாக இருக்கு. கேன்சரால்
தான் நான் என் அப்பாவையும் இழந்தேன்” என உருக்கமாக பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் ‘சன் NXT’ OTT தளத்தில் வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்தப்படம், பொங்கல் வெளியீடாக கடந்த 12ஆம் தேதி திரைக்கு வந்தது. ஏலியன் கதைக்களத்துடன்,
கச்சிதமான VFX காட்சிகளால் குழந்தைகளை கவர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக 375 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியள்ளது.