பஞ்சாப்:
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில், பஞ்சாபைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜஸ்பீர் சிங் கைது செய்யப்பட்ட சம்பவம், தேசிய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
11 லட்சம் சந்தாதாரர்களுடன் ‘ஜான் மஹால்’ சேனல்;
ஜஸ்பீர் சிங் ‘ஜான் மஹால்’ என்ற யூடியூப் சேனலை இயக்கி வந்தார். சமூக, அரசியல், சமூகவியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பகிரும் இந்தக் காணொளி சேனலுக்கு 11 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அதிகாரியுடன் நேரடி தொடர்பு;
விசாரணை எடுக்கப்பட்ட ஜஸ்பீர் சிங், பாகிஸ்தான் இரகசிய காவல் அமைப்பான ஐ.எஸ்.ஐ-யை சேர்ந்த ஷகிர் என்ற அதிகாரியுடன் தொடர்பில் இருந்தது உறுதியாகியுள்ளது. அவர் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்ததோடு, கடந்த காலங்களில் மூன்று முறை பாகிஸ்தான் பயணித்ததும் தெரியவந்துள்ளது.
தூதரக அதிகாரியுடன் தொடர்பு, அலைபேசி சோதனையில் நிரூபணம்;
ஜஸ்பீர் சிங்கின் மொபைல் போனில் பாகிஸ்தானில் உள்ள பல தொடர்பு எண்கள் இருந்ததோடு, இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடனும் அவர் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு மற்றொரு யூடியூபர் கைது;
இதற்கு முன், ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் சார்பாக உளவு செய்ததாகக் கைது செய்யப்பட்டிருந்தார். ஜஸ்பீர் மற்றும் ஜோதி மல்ஹோத்ரா இருவரும் பாகிஸ்தானில் ஒன்றாக காணப்படும் வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாதுகாப்பு அலர்ட்;
இந்த சம்பவம், சமூக ஊடகங்களையும், டிஜிட்டல் தளங்களையும் பயன்படுத்தி வெளிநாட்டு உளவுத்துறைகள் தகவல் திரட்டும் வகையில் செயல்படுவது குறித்து இந்திய உளவுத்துறைக்கு முக்கிய எச்சரிக்கையாக அமைகிறது.
இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேசிய புலனாய்வு அமைப்புகள் இந்த முறை துல்லியமாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன.