2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தாண்டு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் இணையதளப் படிவத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 31 ஆம் தேதி வரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம் என்று மத்திய நிதியமைச்சகம் கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த கால அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர்-15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் படிவங்கள் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இந்த கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் இதனால் அனைவரும் துல்லியமாக எளிதாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்























