கேப்டன் விசுவாசிகளுக்கு ஒரு ஊடகவியலாளரின் மனம் திறந்த மடல்!

தனிமனித ஒழுக்கத்தோடும் உழைப்பை மட்டும் நம்பி சினிமாவிலும் அரசியலிலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.அவரால் வாழ்ந்தவர்கள் கோடி அழிந்தவர்கள் யாரும் அல்ல. அப்படிப்பட்ட தெய்வத்திருமகனின் வாரிசு திரு.விஜய் பிரபாகரன் அவர்கள் கேப்டன் அவர்களுடைய கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு மக்களுக்காகச் சேவையாற்ற விருதுநகர் தொகுதியில் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
கேப்டனுடைய விசுவாசிகள் திரைத்துறையில் பல்லாயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள்.கேப்டன் அவர்களின் மறைவின் போது இணையதள ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அவருக்காக பல நட்சத்திரங்கள் பேசினீர்கள்,
உண்மையிலேயே நீங்கள் கேப்டனை நேசித்திருந்தால் கேப்டனுடைய விசுவாசியாக இருந்தால் நீங்கள் அனைவரும் விருதுநகர் தொகுதியில் அன்புச் சகோதரர் விஜய பிரபாகரனுக்காகப் பிரச்சாரம் செய்ய வாருங்கள்.அதுதான் நீங்களும் நானும் கேப்டனுக்கும் கேப்டன் குடும்பத்திற்கும் செய்யக்கூடிய ஒரே நன்றி கடன்.
மக்களுக்காகவே உழைத்து மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு மாபெரும் தலைவன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அதை நாம் ஒருபோதும் மறந்து விடக் கூடாது.
வாருங்கள் விருதுநகர் தொகுதிக்கு ஒன்றிணைந்து உழைப்போம் இது நம் கேப்டனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.
பேரன்புடன் – சமரன் (ஊடகவியலாளர்)