
திருப்பூரில் செய்தியாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். கூலிப்படையினரின் இத்தகைய தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதற்காக ஒரு சிறப்பு பிரிவையே ஏற்படுத்த வேண்டிய நேரம் இது: காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்: புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
திருப்பூரில் செய்தியாளர் நேசபிரபு மீது சமூக விரோதிகள் கோரத்தாக்குதல் தொடுத்த செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் அதிகரித்து வரும் வன்முறைhyf சட்டம் ஒழுங்கின் லட்சணத்தை காட்டுகின்றன: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்
திருப்பூரில் செய்தியாளர் நேசபிரபு, மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தாக்குதல் பற்றி காவல்துறையிடம் முன்கூட்டியே கூறியும் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் விடியா அரசின் காவல்துறை இருந்தது கண்டனத்திற்குரியது: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் நேசபிரபு மீது சமூக விரோதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதையே இந்த கொடூர சம்பவம் காட்டுகிறது: பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்