Site icon No #1 Independent Digital News Publisher

இளம் தொழிலதிபராக கோவையில் வலம் வரும் “The Tile Bros” டைல்ஸ் நிறுவனத் தலைவர் சந்தோஷ் குமார் !

கோயம்புத்தூரில் தோன்றிய ஒரு சிறிய முயற்சி இன்று தேசிய அளவில் பரந்து விளங்கும் வணிகமாக வலம் வருகிறது. “The Tile Bros (Pride of Tiles)” எனும் டைல்ஸ் விற்பனை நிறுவனத்தை 2012ஆம் ஆண்டு திரு. சந்தோஷ் குமார் அவர்கள் நிறுவினார். தொடக்கத்தில் ஒரு கிளையுடன் துவங்கிய இந்த நிறுவனம், தற்போது 1,00,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட மிகச் சிறந்த டைல்ஸ் பிராண்டாக வளர்ந்துள்ளது.

தொழிலில் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியும், தரத்தில் அவர்களது முழு ஈடுபாடும் இன்று கோயம்புத்தூரில் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட கிளைகளாக விரிந்திருக்கின்றன. இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை பெற்றுள்ளனர்.

இளம் தொழிலதிபராக திரு. சந்தோஷ் குமார் தன்னை நிலைநிறுத்தியதோடு, தொழில்முனைவோராக தனியார் மற்றும் அரசு அமைப்புகளின் பல அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான The Times of India, “The Tile Bros” நிறுவனத்தை “The Pride of Coimbatore” எனும் சிறப்புப்பெயருடன் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த அங்கீகாரம், கோயம்புத்தூரின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் முக்கியமான அடையாளமாகும். நகரின் தொழில்துறையில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள சந்தோஷ் குமார் மற்றும் அவரது “The Tile Bros” நிறுவனத்திற்கு இது ஒரு பெருமைபெரும் அடையாளமாக அமைந்துள்ளது.

 

 

Exit mobile version