2022இல் வெளியான ‘கட்டா குஸ்தி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் செல்லா அய்யாவு, விஷ்ணு விஷால் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. குடும்பத்தோடு கொண்டாடும் வகையில், காமெடி கமர்ஷியல் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. புதிய படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. விரைவில் படத்தின் இசையமைப்பாளர், பிற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!
