குஜராத் மாநிலம் காந்திநகரில் 5 ஆயிரத்து 536 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்திய முப்படைகளை பாராட்டுவதாக தெரிவித்தார்.
முப்படையினரை பாராட்டி நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெறும் மூவர்ணக் கொடி பேரணி மக்களின் தேசப்பற்றை வெளிப்படுத்துகிறது எனவும் இந்திய விடுதலைக்குப் பிறகு பாகிஸ்தானுடன் நடந்த 3 போர்களிலும் அந்த நாட்டிற்கு உரிய பாடத்தை கற்பித்திருக்கிறோம் எனவும், பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள முடியாது எனவும் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை வெறும் 22 நிமிடங்களில் இந்திய ராணுவம் வெற்றிகரமாக அழித்தது எனவும் பிரதமர் மோடி கூறினார்