சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை துரிதப்படுத்தி, செப்டம்பர் 26-ம் தேதிக்குள் முடிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட சிறப்பு திருத்தப் பணி (SIR) மூலம் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை, தற்போதைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பீட்டுப் பணியை செப்.26-க்குள் முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டங்கள் மூலம், பட்டியல் திருத்தத்தில் வெளிப்படைத்தன்மையையும், துல்லியத்தையும் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த உத்தரவு, தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலை முறையாக புதுப்பித்து, தவறுகளை சரிசெய்யும் நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

