தமிழக வெற்றி கழகம் வாய்ப்பு எப்படி?
ஸ்டாலின் தவிர்த்து மிகப்பெரிய ஆளுமைகள் இல்லாத நேரத்தில் விஜய் அரசியல் கட்சி தொடக்கம்.
விஜயின் திடீர் அரசியல் பிரவேசம் சிதறுண்டு அந்தரத்தில் தொங்கும் அதிமுக – அமமுகவுக்கு
அதிர்ச்சி தகவல்தான்.
அதிமுகவை உடைத்து கட்சியை வளர்க்கலாம் என்று நினைத்திருந்த அண்ணாமலைக்கும் இது ஆப்புதான்.
விஜயகாந்த் போல கிராமப்புற ரசிகர்கள் விஜய்க்கு அதிகமே.சிதறி கிடக்கும் அதிமுக, தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாஜக,விஜயகாந்த் மறைவால் விழி பிதுங்கி நிற்கும் தேமுதிக,தமிழர் மட்டுமே என ஒருசார்போடு மல்லுகட்டும் சீமான்,திமுக பக்கம் கரை ஒதுங்கிய மய்யம் கமல்ஹாசன்,சாதி பின்புலத்தில் ஸ்ட்ராங்கா நிற்கும் விசிக மற்றும் பாமக,ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறல்களை அடக்க முடியாமல் தடுமாறி கொண்டிருக்கும் தேசிய கட்சிகள் வேறு யாரும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
இந்த சூழலில் விஜய் அரசியல் பிரவேசம்
முக்கியத்துவம் பெறுகிறது.ஸ்டாலின் தவிர்த்து முதல்வர் வேட்பாளர்கள் யார்..யார்?
OPS
EPS
TTV
பிரேமலதா
திருமாவளவன்
சீமான்
கமல்ஹாசன்
அன்புமணி
அண்ணாமலை
முறையாக கட்சியை கட்டமைத்து அரசியல் களத்தில் இறங்கி மக்களை சந்தித்தால் ஸ்டாலினுக்கு பிறகு மேற்கண்டவர்களில் விஜய் முன்னிலை பெற வாய்ப்பு.மிகப்பெரிய கணக்குடன் களத்தை தயார் செய்து
வருகிறார் விஜய்.தமிழ்நாட்டில் மார்க்கெட் உச்சத்தில் உள்ளபோது அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் அவசர அவசரமாக
கட்சி தொடங்கி இருக்கிறார் என்றால் மிக முக்கிய காரணம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது.
– பிரபுதாசன்