Site icon No #1 Independent Digital News Publisher

சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் -தமிழ்நாடு அரசு உத்தரவு !

 

சென்னை நகருக்கு தனியாக ஒரு பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பெருநகரங்களில் நாளுக்கு நாள் பேரிடர் பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்வதற்காக சமீபத்தில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

அந்த சட்டத்தில் மாநிலம் முழுவதுதிற்க்குமான பேரிடர் மேலாண்மை ஆணையம் இருந்தாலும் அந்தந்த நகர்புறங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை நகருக்கு தனியாக ஒரு பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர், CMDA, தலைமை செயல் அதிகாரி, உள்ளிட்ட அணைத்து துறை அதிகாரிகளை சேர்த்து இந்த பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவக்கப்பட்டுள்ளது.

இந்த பேரிடர் மேலாண்மை ஆணையத்தை பொறுத்தவரையில், பேரிடர் காலங்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுப்பது, பேரிடர் காலத்தில் அணைத்து துறைகளுடன் இணைந்து பணியாற்றுவது, உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version