தாடி வளர்பதற்கான ரகசியத்தை சொன்ன அண்ணாமலை!
நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காகவே தாடி வளர்த்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை கூறியதாவது. தமிழகத்தில் தாங்களின் இரண்டு கட்சிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று திமுக மற்றும் அதிமுகவினர் கருதுகின்றனர். இரண்டு கட்சிகளும் பங்காளிகளை போல செயல்படுகின்றன. அவர்களினையே 3 மதிப்பெண் அதிகமா, 4 மதிப்பெண் அதிகமா என்ற போட்டி தான் உள்ளது.
அந்த இரண்டு கட்சிகளுமே தோல்வி அடைந்த கட்சிகள். 100 மதிப்பெண் பெற்ற மோடிக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். திமுக, அதிமுகவுக்கு பாஜக மீது உள்ள வன்மத்தை விட அண்ணாமலை மீது தனிப்பட்ட முறையில் அதிக வன்மம் இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி பாஜகவால் உருவாக்கப்பட்டது. தண்ணீரை போன்று நீரோட்டம் உள்ள கூட்டணி. அதன் கதவுகள் எப்போதும் திறந்து தான் உள்ளது. மோடியை ஏற்றுக்கொள்வோர் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். அதிமுகவில் எத்தனை தலைவர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஒரு புரட்சி தலைவரை உருவாக்க முடியுமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினர்.