Site icon No #1 Independent Digital News Publisher

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகளை திறக்கப்படும் -பள்ளி கல்வித்துறை அறிவிப்பு !

 

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

1 முதல் 12ம் வகுப்பு வரை கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை வழி காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும், மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும், செவ்வாய் கிழமைகளில் 6-12 வகுப்பினருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version