Site icon No #1 Independent Digital News Publisher

சென்னை பல்கலைக்கழகத்தில் சம்பள பிரச்சினை: நிதி நெருக்கடிக்கு தீர்வு காண தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

சென்னை பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நிதி நெருக்கடி காரணமாக, பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பலர்,மாத ஊதியங்களைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்த நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக அரசை உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.குமார், பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோன்று, சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் இதேபோன்ற நிதி நெருக்கடி நிலவுகிறது.

இது குறித்து,டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோர் மாத ஊதியம் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், மாநில அரசின் பொதுநிதியின் மூலம் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேவையான நிதியை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கும், உயர்கல்வித் துறையின் உயர்மட்டக்குழுவை செயல்படுத்துவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version