Site icon No #1 Independent Digital News Publisher

பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு !

Sriharikota, May 17 (ANI): Indian Space Research Organisation (ISRO) to launch its 101st mission, EOS-09 aboard the PSLV-C61 from the First Launch Pad (FLP) on May 18, at Satish Dhawan Space Centre in Sriharikota on Saturday. (ANI Photo)

 

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

பூமி கண்காணிப்புக்காக 1,696 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இஸ்ரோவின் 101-வது ராக்கெட்டான இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும்.

இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமான விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தது என்றூம் 3வது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

வரும் காலங்களில் தவறுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் செயற்கைகோள்களை ஏவும்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் அப்போது கூறினார்.

Exit mobile version