No #1 Independent Digital News Publisher

ஒரு திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்வதினால் யாருக்கு பயன்..? : தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

பிரபல தயாரிப்பாளர் திரு.தனஞ்செயன் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்.

Producer Dhananjayan

முன்பு வெற்றி பெற்ற திரைப்படங்கள் தற்போது ரீ ரிலீஸ் செய்வதைக் குறித்து உங்கள் கருத்து..?

மார்க்கெட் ஆப்பர்சூனிட்டி இருக்கும்போது ரீ ரிலீஸ் செய்வது தவறே இல்லை. மார்க்கெட் ஆப்பர்சூனிட்டி என்பது திரையரங்குகளில் எந்தத் திரைப்படமும் திரையிடப்படாமல், பழைய படங்கள் மற்றும் சிறிய படங்கள் வெளியிடப்படுவது, அதாவது பெரிய அளவில் மக்கள் ஆதரவு இல்லாத திரைப்படங்கள் வெளியிடப்படும்போது, ஏற்கனவே வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படங்களை வெளியிட்டால், அந்தப் திரைப்பட கதாநாயகனின் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள். இதனால் திரையரங்குகளுக்கு ஒரு நல்ல நிலைப்பாடு ஏற்படும். தற்போது வெளிவந்த புதிய திரைப்படங்கள் எதுவும் வெற்றியடையவில்லை. இதனால் மக்கள் பிறமொழி படங்களுக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். முக்கியமான பெரிய திரைப்படங்கள் வரும்பொழுது, மக்கள் ரீ ரிலீஸ் படங்களுக்குப் பெரிதாக வாய்ப்பளிப்பதில்லை. திரையரங்குகளில் இது போன்ற நீண்ட இடைவெளி இருக்கும்போது இன்று கில்லி திரைப்படம் வெளியாகி முதல் நாளிலேயே லட்சக்கணக்கான மக்கள் திரையரங்குகளுக்கு வந்து, ஒரு தமிழ் படத்திற்கு நல்ல வரவேற்பை அளித்துள்ளனர். இதனால் மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வர வேண்டிய ஒரு பழக்கம் ஏற்படுகிறது. சினிமாத்துறை மென்மேலும் அடுத்தடுத்த கட்டம் செல்ல வேண்டும் என்றால் மக்கள் திரையரங்குகளுக்கு வந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காக ஏதாவது ஒரு வகையில் நாம் பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதில் ரீ ரிலீஸ் என்பது ஒரு நல்ல வழி. திரைப்படங்கள் வெளிவராத ஒரு நீண்ட இடைவெளியின்போது ரீ ரிலீஸ் செய்வதை ஒரு நல்ல வாய்ப்பாகத் தான் நான் பார்க்கிறேன்.

ஒரு திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்வதினால் யாருக்கு பயன்..?

ஒரு படத்தை ரீ ரிலீஸ் செய்வதால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அந்தத் திரைப்படத்திற்கு நெகட்டிவ் ரைட்ஸ் வாங்கிய உரிமையாளருக்கும் நல்ல பலன் இருக்கும். உதாரணமாகத் தற்போது வெளியாகி இருக்கும் கில்லி திரைப்படத்தை,  75 லட்சம் மினிமம் கேரன்டி யில் கொடுக்கத் தயாராக இருந்தார்கள், ஆனால் யாரும் அதற்கு முன் வரவில்லை. எனவே பர்சன்டேஜ் கமிஷன் அடிப்படையில், ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் இந்தத் திரைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் இந்தப் படத்திற்கு நெகட்டிவ் ரைட்ஸ் வாங்கிய உரிமையாளர், மூன்றிலிருந்து நான்கு கோடிவரை பகிரும்போது, நல்ல பயனை எதிர்பார்க்கலாம்.அடுத்து பயனுடையப் போகும் நபர் திரையரங்கின் உரிமையாளர்கள்.திரையரங்குகள் காலியாக இருக்கும் நேரத்தில், கில்லி போன்ற சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளியாகும்போது 80 சதவீதம் மக்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உச்ச நடிகர்கள் நடித்திருக்கும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை மீண்டும் திரையில் பார்ப்பதற்கு மக்களுக்கும் ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் ஆக இருக்கும்.இது போன்ற நிகழ்வு அடுத்து வெளியாக இருக்கும் ரத்னம் போன்ற மிகப்பெரிய திரைப்படங்களைக் கண்டுகளிக்க மக்கள் திரையரங்குகள் வருவதற்கு ஒரு உந்துதலாக இருக்கும்.

 

Editor : Vaishnavi (Jananaayakan Desk)

Exit mobile version