சமூக ஊடகங்களில் பணம் கொடுத்து ட்ரோல் செய்கிறார்கள்: நடிகை பிரியங்கா மோகன் குற்றச்சாட்டு
தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் , சமூக ஊடகங்களில் தன்னை குறிவைத்து திட்டமிட்ட முறையில் ட்ரோல்கள் மற்றும் மீம்ஸ்கள் வெளியிடப்படுகின்றன என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒரு சமீபத்திய நேர்காணலில் பேசுகையில், தன்னைப் பற்றிய சில ட்ரோல்கள் இயல்பாக உருவாகும் விமர்சனங்கள் அல்ல என்றும், சிலர் திட்டமிட்டு பணம் கொடுத்து தன்னை எதிர்த்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிடச் செய்கிறார்கள் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
“என்னைப் பற்றிய சில ட்ரோல்கள் மற்றும் மீம்ஸ்கள் இயல்பாக உருவாகும் விஷயங்கள் போல தெரியவில்லை. சிலர் திட்டமிட்டு பணம் கொடுத்து என்னை எதிர்த்து பதிவுகளை வெளியிடச் செய்கிறார்கள் என்ற உணர்வு எனக்கு உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்களை சமாளிக்க தன்னைத் தானே பயிற்சி செய்துக் கொண்டதாகவும் நடிகை தெரிவித்தார். “Social Media-க்களில் வரும் விமர்சனங்களை சமாளிக்க கற்றுக்கொண்டேன். அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், என் வேலை மற்றும் என் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன்,” என்றும் அவர் கூறினார்.
திரையுலக பிரபலங்கள் மீது சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் ட்ரோல் கலாச்சாரம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வரும் நிலையில், பிரியங்கா மோகனின் இந்த கருத்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

