நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க இயலாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், இன்று முதல் ஆம்னி பேருந்துகள் சென்னை நகரத்திற்குள் பயணிகளுடன் வர அனுமதி இல்லை தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே வரதராஜபுரத்தில் தங்களுக்கான தனியாக பார்க்கிங் வசதி தயாராகும் வரை பயணிகளுடன் கோயம்பேடு வரை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் இன்று வலியுறுத்தினர்.
ஆனால் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, நாளை முதல் கட்டாயமாக கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். மக்களுக்காக தான் அரசு செயல்படும்; ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்காக செயல்பட முடியாது என்றும் அவர் கூறினார்.
























