திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு மீது நேற்று 24-1-2024 நடந்தகொலை முயற்சி சம்பவத்திற்கு கண்டணம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவ சிகிச்சையில் உள்ள பிரபுவுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.மேலும் சம்பவம் நடந்த அன்று தொலைபேசி மூலம் பாதுகாப்பு கோரிய நிலையில் உரிய நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நடந்த சம்பவம் : நேற்றிரவு 24-1-2024 நேசபிரபுவை மர்ம நபர்கள் சிலர் கார்களில் பின்தொடர்ந்து வந்ததால் சந்தேகமடைந்த அவர் அருகிலுள்ள பெட்ரோல் பங்கின் மேலாளர் அறையில் மறைந்து கொண்டார். இருப்பினும் அந்த கும்பல் மேலாளரின் அறை ஜன்னலை உடைத்துக்கொண்டு வந்து நேசபிரபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் கை, கால்களில் வெட்டப்பட்டு காயமடைந்த நேசபிரபு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வெட்டப்படுவதற்கு முன் மர்ம நபர்கள் தன்னை பின் தொடர்ந்து வருவதாக போலீசாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேசபிரபு பேசிய ஆடியோ தற்போது இனையத்தில் பரவி வருகிறது.