Site icon No #1 Independent Digital News Publisher

2025-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ!

2025-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ .

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், 72வது உலக அழகி போட்டி மே 10ம் தேதி துவங்கியது. 108 நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள், கிரீடத்தை வெல்ல போட்டியிட்டனர். மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா உட்பட 40 பேர் காலிறுதிக்கு நுழைந்துள்ளனர். இதன் இறுதிப் போட்டி, ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் நடைபெற்றது.

இதில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ உலக அழகி பட்டம் வென்றார். அவருக்கு, கடந்த ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, உலக அழகிக்கான கிரீடத்தை அணிவித்தார். ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்த ஹாசெட் டெரஜி இரண்டாவது இடத்தையும், ஐரோப்பிய நாடான போலந்தை சேர்ந்த மஜா கிலாஜ்டா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

1951-ம் ஆண்டு, உலக அழகிப் போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version