பொருளாதார தடைகளை தாண்டி கல்வி: தகுதியான மாணவர்களுக்கு பெரிய வாய்ப்பு!
கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்திவாய்ந்த கருவி. அதனை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் என்ற நோக்கில், கிரேஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி மற்றும் கேரிங் ஹார்ட்ஸ் பவுண்டேஷன் இணைந்து, ஆண்டுதோறும் ஒரு முக்கியமான சமூகப்பணியை முன்னெடுத்து வருகின்றன.
இந்த முயற்சியின் மூலம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் மற்றும் இலவச கல்லூரி சேர்க்கை வழங்கப்படுகிறது.

🎓 முக்கிய அம்சங்கள்
- ✔️ தகுதியான மாணவர்களுக்கு முழு அல்லது பகுதி ஸ்காலர்ஷிப்
- ✔️ இலவச கல்லூரி சேர்க்கை வாய்ப்பு
- ✔️ மாணவர்களின் திறமை மற்றும் தேவைக்கு ஏற்ப கல்லூரி மற்றும் படிப்பு தேர்வு வழிகாட்டல்
- ✔️ உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு,
Lion’s Club மற்றும் தனிநபர் ஸ்பான்சர்கள் மூலம்
கல்லூரி கட்டணம் நேரடியாக செலுத்தப்படும்
👨👩👧👦 முன்னுரிமை பெறும் மாணவர்கள்
- 🔹 Single Parent குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்
- 🔹 அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்
- 🔹 வறுமைக் கோட்டுக்கு கீழ் (BPL) உள்ள மாணவர்கள்
📌 முழுமையான வழிகாட்டல்
மாணவர்கள் எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து,
அவர்களின் திறன், ஆர்வம் மற்றும் எதிர்கால வாய்ப்புகளை கருத்தில் கொண்டு
சிறப்பு கல்வி ஆலோசனை வழங்கப்படுகிறது.
📝 விண்ணப்பிக்கும் முறை
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் மாணவர்கள்,
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
https://forms.gle/aw11Reiz5XWRoutu9
💡 சமூக பொறுப்பு – கல்வி வழியாக முன்னேற்றம்
இந்த முயற்சி, கல்வியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் ஒரு முக்கியமான படியாகும்.
சமூக அமைப்புகள் மற்றும் நற்பண்பாளர்களின் ஒத்துழைப்புடன்,
இன்னும் பல மாணவர்களின் கனவுகள் நனவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.