Site icon No #1 Independent Digital News Publisher

தமிழ் நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை?

தமிழ் நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானியனின் மக்களின் நிலை என்ன..?

பல்லடம் நியூஸ்-7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையை தொடர்பு கொண்ட போது ஸ்டேஷன்ல ஆள் இல்லை.. பாதுகாப்பு வேணும்னா நீங்களே ஸ்டேஷன் வருமாறு கூறியிருக்கிறார் ஒரு காவலர் இப்படி பேசலாமா.? போலி திராவிட மாடல் அரசில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன ஆகும்?

செய்தியாளர் நேச பிரபு மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகையாளர் நேச பிரபுவுக்கு போதிய சிகிச்சை கொடுக்கவும் அவருக்கான இழப்பீடு வழங்கவும் தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறேன்

– மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Exit mobile version