Site icon No #1 Independent Digital News Publisher

‘ஜனநாயகன்’ திரைப்படம் மறுஆய்வு – சென்சார் சான்றிதழ் கிடைத்த பின் வெளியீட்டு தேதி: KVN தயாரிப்பு நிறுவனம்

‘ஜனநாயகன்’ திரைப்படம் மறுஆய்வு – சென்சார் சான்றிதழ் கிடைத்த பின் வெளியீட்டு தேதி: KVN தயாரிப்பு நிறுவனம்

சென்னை:
KVN தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் (CBFC) மறுஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. மறுஆய்வு நடைமுறைகள் முடிந்து, சென்சார் சான்றிதழ் கிடைத்த உடன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

திரைப்படங்களை மறுஆய்வுக்கு அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தயாரிப்பு தரப்பினர் கவனம் ஈர்த்துள்ளனர்.
அதன்படி,
மறுஆய்விற்கு அனுப்பப்பட்ட நாளிலிருந்து 20 நாட்களுக்குள், அந்த திரைப்படத்தை பார்ப்பதற்கான புதிய தணிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் என்பது சென்சார் விதிமுறையாகும்.

மேலும்,
முதல் முறையாக திரைப்படத்தை பார்த்த 5 பேர் கொண்ட குழுவினர், மறுஆய்வு குழுவில் உறுப்பினர்களாக இடம்பெறக் கூடாது என்பதும் விதிமுறைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் தயாரிப்பு நிறுவனம் உறுதியாக உள்ளது.
மறுஆய்வு நடைமுறை முறையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் என்ற நம்பிக்கையையும் KVN நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான அடுத்த கட்ட அறிவிப்புகள், குறிப்பாக வெளியீட்டு தேதி, சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டதும் உடனடியாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Exit mobile version