Site icon No #1 Independent Digital News Publisher

இத்தாலி ஓபன் டென்னிஸ் |ஜானிக் சின்னரும் அல்காரசும் அரையிறுதிக்கு முன்னேற்றம் !

 

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜானிக் சின்னரும் அல்காரசும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய சின்னர் 6-0, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜாக் டிராபரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்

Exit mobile version