Site icon No #1 Independent Digital News Publisher

டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ரா !

 

டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய சாதனைப் படைத்துள்ளார்.

டயமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றுப் போட்டிகள் கத்தாரில் உள்ள தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, பாருல் சவுத்ரி, குல்வீர் சிங் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இந்நிலையில், இன்று நடந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். போட்டியின் முடிவில் 2வது இடம் பிடித்தார்.

இதற்கு முன் 2022 ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் போட்டியில் 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்க

Exit mobile version