பாக்கிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப் படை தளத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வீரர்கள் முன்பு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியாவின் சுயமரியாதை உலக அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது எனவும், நமது அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களின் முன்பு பாகிஸ்தானால் போட்டியிட முடியவில்லை எனவும், பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதற்கான பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும் எனவும் நாம் கொடுக்கும் பதிலடி அவர்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும் என எச்சரித்தார்.
விமானப் படைக்கும் ராணுவப் படைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு சிறப்பானதாக இருந்தது எனவும், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஆபரேஷன் சிந்தூரில், ஆயுதங்களை வீரர்கள் மிகச்சிறப்பாக கையாண்டனர் எனவும், முப்படைகளும் தனது பாராட்டுக்கள் என த்ரிவித்தார்.