Site icon No #1 Independent Digital News Publisher

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு !

 

ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜோ பைடன் இவருக்கு வயது 82. இவர் கடந்த 2021 முதல் 2025வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார். இந்நிலையில், தற்போது ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்,மிகவும் வீரியமிக்க இந்த புற்றுநோய் பைட்டனின் எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை புற்றுநோய்க்கு சிகிச்சைகள் இருக்கின்றனர். ஆனால்,இந்த புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி,புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குபின் அதிகபட்சமாக 4 முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து,ஜோ பைடன் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்தேன் என்று தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 

 

Exit mobile version