Site icon No #1 Independent Digital News Publisher

“தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தால், எதிர்ப்பு தெரிவிப்பதில் முதல் குரல் நான்தான்” – இபிஎஸ் !

 

சென்னை, ஜூன் 7, 2025 ….

தொகுதி மறுவரையறை குறித்து நாடு முழுக்க பேசப்படும் நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய கருத்து தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தின் பாராளுமன்ற தொகுதிகள் குறையும் நிலை வந்தால், அதற்கு எதிராக முதலில் குரல் எழுப்புவது நான்தான்,” என அவர் கூறினார்.

“தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் எந்த முடிவையும் ஏற்க முடியாது. மாநில உரிமைகளை பாதுகாப்பது எங்கள் கடமை,” என்றும் அவர் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறையை பாஜக ஆதரிக்கிறது. ஆனால் பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்நிலையில் இபிஎஸ் கூறிய இந்த வார்த்தைகள், தமிழக அரசியலில் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.

Exit mobile version