மணிப்பூரில் மீண்டும் வன்முறை நடந்துள்ளதால் மாநிலம் முழுவதும் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அச்சப்படுகிறார்கள். பாதுகாப்புப் படைகள் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை ஏன் மீண்டும் உருவாயிற்று என்பதைப் இந்த தொகுப்பில் பார்ப்போம்.
பிரச்சனைக்குக் காரணம் என்ன?
முதன்மை காரணம் – மீதை மற்றும் குகி சமூகங்களுக்கு இடையிலான கலவரம்.
1. மீதை (Meitei) சமூகத்தை சேர்ந்தவர்கள் மாநிலத் தலைநகரான இம்பாலில் பெரும்பான்மையாக உள்ளவர்கள்.
2. குகி (Kuki) சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள்.
மீதை சமூகத்துக்கு மூலவாசி (ST – Scheduled Tribe) அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையால் கடந்த ஆண்டு முதல் வன்முறைகள் ஆரம்பமானது.
என்ன நடந்தது?
- மீதை சமூகத்துக்கு ST அந்தஸ்து கொடுத்தால், அவர்கள் அடிப்படை உரிமைகள், நில உரிமைகள் போன்றவற்றில் மேலதிக பலன்கள் பெறுவார்கள்.
- இதனால், குகி மக்கள் தங்கள் உரிமைகள் குறையப்போகிறது என பயப்படுகிறார்கள்.
- இதுவே பெரிய இனத் தகராறாக மாறியுள்ளது.
தற்போதைய சூழ்நிலை என்ன?
- சமீபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதால் மறுபடியும் வன்முறை வெடித்துள்ளது.
- பல பகுதிகளில் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.
- இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
- மக்கள் பாதுகாப்புக்காக முகாம்களில் தஞ்சம் புக்ந்துள்ளனர்.
தீர்வு எங்கே?
- மத்திய அரசும் மாநில அரசும் உண்மையாக மத்தியில் இருந்து சமாதான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
- இரு சமூகங்களும் பேசுவதற்கான அமைதிக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
- மக்களின் நம்பிக்கையை மீண்டும் உருவாக்க வேண்டும்.
மணிப்பூர் பிரச்சனை, சாதி மற்றும் சமூக அடிப்படையிலான குழப்பங்களால் மூடப்பட்ட நெடிய ஒரு பிரச்சனை. இதற்கான தீர்வு கோபத்திலும் வன்முறையிலும் இல்லை – உண்மையான அரசியல் சிந்தனையிலும், சமூக நீதியிலும் தான் உள்ளது.
-சமரன் (பத்திரிக்கையாளர்)