Site icon No #1 Independent Digital News Publisher

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்புப் பேச்சு!

ஆளுநர் உரையில் அரசு செயல்படுத்தவுள்ள திட்டங்கள் பற்றி கூறுவது மரபு. ஆனால் சென்ற ஆண்டு போலவே அப்படியான குறிப்புகள் எதுவும் இதில் இல்லை. எவ்விதமான புதிய மக்கள் திட்டங்களையும் அறிவிக்காமல், கசப்பு வார்த்தை ஜாலத்தை அரசு தொகுத்துள்ளது.

 

ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை. ஆளுநர் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் வழங்கியிருந்தார். அதை சபாநாயகர் நிறைவேற்றாததால், அவர் உரையை புறக்கணித்துள்ளார். இது அரசுக்கும், சபநாயாகருக்கும், ஆளுநருக்கும் உள்ள பிரச்சனை.

 

மரபை மாற்றுகிறார்களா, கடைபிடிக்கிறார்களா? என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். சபாநாயகர் ஏற்கனவே பல மரபுகளை பின்பற்றுவது இல்லை. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபுகளை சபாநாயகர் மீறி வருகிறார்.

 

அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என்றனர். பேருந்தின் முன் & பின்புறம் பெயிண்ட் அடித்து, அதில் மட்டுமே மகளிர் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனரே என கேட்டேன். ஆனால் சட்டமன்றத்திலேயே தவறான தகவலை தான் அரசு தந்தது.

 

இதுவரை 100 டீசல் பேருந்துகளையே அரசு வாங்கியதாக தெரிகிறது. ஆட்சிக்கு வரும் முன்பு வரியில்லா பட்ஜெட் தருவோம் என்றார்கள், இன்று வரி போட்டு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள். அதிமுக அரசு கொண்டுவந்த பல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தியுள்ளனர்.

 

கருணாநிதியின் பெயரை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வைப்பதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் செல்ல இருந்ததால், அவசர அவசரமாக திறந்திருக்கிறார்கள் என்றொரு செய்தி கிடைத்துள்ளது. மக்கள் அவதிப்படுகிறார்கள், ஆனால் அரசு அதை மறைக்கிறது : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி

Exit mobile version