பாஜக மாநில தலைவராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று முதல் அண்ணாமலை தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார் அது என்னவென்றால் RSS-ஐ சார்ந்த யாரும் தன்னுடன் நெருங்கிப் பழகாதவாறு காட்டிக் கொள்கிறார் ஆனால் அவரைப் பின்னால் இருந்து வழிநடத்துவதே RSS தான்.
தலைமையைத் தவிர கட்சியில் தன்னுடன் பயணிக்கும் யாரையும் அண்ணாமலை இதுவரை நம்பியது கிடையாதாம். யார் என்ன சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக் கொண்டு தலைமைக்குத் தெரிவித்து விட்டுத் தலைமையின் கட்டளையின்படியே எந்த நகர்வையும் எடுத்து வருகிறாராம்.
உடன் பயணிக்கும் முக்கியமான மூத்த தலைவர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட முக்கியமான தகவல் என்னவென்றால்

“பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை போடுவதெல்லாம் வேஷம். தற்போதுள்ள அரசியலில் தமிழ்நாட்டில் மிகச் சிறந்த நடிகன் என்றால் அது அண்ணாமலை தான். தமிழ்நாட்டுக்கு பாஜக துரோகம் செய்கிறது என்று தெரிந்தும் கூடப் பாஜக வோடு கைகோர்த்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார். ஆனால் பாஜக தலைமை அண்ணாமலையை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கிறது ஒரு கட்டத்திற்கு மேலாக இதே அண்ணாமலையை பாஜக தலைமை தூக்கி எறியும் அப்போது அண்ணாமலைக்கு அரசியல் என்றால் என்ன என்பதும் புரியும்”.
இதே அண்ணாமலை பாஜகவை விட்டு விலகித் தனிக்கட்சி தொடங்குவார் நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள்…
அண்ணாமலைகுரு திறமையான துரோகி அருமையான நடிகர்.
என்று அந்த மூத்த பாஜக நிர்வாகி நம்மோடு வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.