மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக திமுக அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் எளிமையான பின்னணியில் இருந்து வரும் நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் கவிஞர் சல்மா, சிவலிங்கம் உள்ளிட்டவர்கள் அதாவது சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்களுக்காக குரல் கொடுத்து ,மக்களின் குரலாகவே இருப்பவர்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை நினைவூட்டும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
இந்தத் தீர்மானம் சமூக வலைதளங்களில் பெரிதும் வரவேற்க்கப்பட்டு வருகிறது. பலரும் “ஸ்டாலின் சொன்னதைச் செய்தார்!” என பாராட்டி வருகின்றனர். இது தமிழக அரசியலில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய நடைமுறையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .
இதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையான விமர்சனத்தில் சிக்கியுள்ளார். கடந்த 2024 மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்த அவர், அந்தக் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. இதனால், சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் அவர் மீது கடுமையான எதிர்மறையான விமர்சங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது : “கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அனுதாபத்தை அரசியல் லாபமாக மாற்றும் நோக்கத்தில் தான் எடப்பாடி பழனிச்சாமி தே.மு.தி.க.வுடன் கூட்டணியில் ஈடுபட்டார்.பின்னர் தே.மு.தி.க.விற்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்” என கூறி வருகின்றனர்.இந்நிலையில், “வாக்குறுதி கொடுப்பது எளிது, ஆனால் அதை நிறைவேற்றுவது தான் உண்மையான தலைவனுக்கு அழகு, மக்கள் இப்போது அரசியல் தலைவர்கள் சொல்லப்படும் வார்த்தைகளையும்,வாக்குறுதிகளையும் மிகவும் நுணுக்கமாக கவனித்து வருகின்றனர்” என அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
எனவே, மக்கள் நலனில் தற்போது திமுக அதிக கவனம் செலுத்தி,மக்களுக்கான தங்கள் பணிகளை மேம்படுத்திக்கொள்கிறார்கள் என திமுகவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது , அதே வேளையில் எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் எதிர்மறையான பிம்பத்தையம் உருவாக்கியுள்ளது.
இதுபோன்ற அரசியல் நிலைகள், எதிர்காலத்தில் மக்களின் நம்பிக்கையையும், அரசியல் கூட்டணிகளின் நிலைப்பாட்டையும் எப்படி மாற்றி அமைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! .