Site icon No #1 Independent Digital News Publisher

திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முக்கிய தீர்மானங்கள் !

இளைஞர்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள்; எந்தளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும்; செயல்பாடுகள் வேகமாக இருக்கும்; வெற்றி உறுதி செய்யப்படும்.

நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்முடைய கூட்டணி; அவர்களோடு நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும்.

என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்; சொல்லைவிட செயலே பெரிது; வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று சொல்வது, உங்கள் மேல்இருக்கும் நம்பிக்கையில்தான்.

தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது.

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம், நலன் மற்றும் உரிமைகளையும் காத்திட “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை கழகத்தின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்துடன் மோதும் பாஜக அரசுக்கு கண்டனம்.

கல்வியை மாநில பட்டியலில் இணைத்திடடுக ..உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக.

பாஜகவையும், அதிமுகவையும் 2026-இல் விரட்டியடித்து கழக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்.

திமுக பொதுக்குழுவில் விஜய்காந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

ஆளுநர் வழக்கில் மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்பிற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் விமர்சனத்திற்குக் கண்டனம்.

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதியை செம்மொழி நாளாக கொண்டாட திமுக பொதுக்குழுவில் தீர்மானம்.

திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சில் கவனம் ஈர்த்த முக்கிய தீர்மானங்கள் மற்றும் பேச்சு.

Exit mobile version