Site icon No #1 Independent Digital News Publisher

உடல் நலனும் உணவு கட்டுப்பாடு -டயட்டிசியன் சுனிஷாவின் ஒரு குட்டி அட்வைஸ்!

 

உடல் நலனும் உணவு கட்டுப்பாடும் பற்றி டயட்டிசியன் சுனிஷாவின் அட்வைஸ் என்ற தொகுப்பில் உடல்நலனில் பாதுகாப்பு குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

அந்த குறிப்பில் ” தற்போதைய உலகம் போட்டிகள் நிறைந்த அவசரயுகமாக திகழ்கிறது. எல்லோருமே தொழில், குடும்பம், பொருளா தாரத்திற்காக ஓடிக் கொண்டிருக்கின்றனர். பணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடலுக்காக கொடுக்கிறார்களா என்றால் சந்தேகம் தான். உலகில் எல்லாவற்றிலுமே வேதிப்பொருட்கள் ஊடுருவி விட்டன. விளைச்சல் அதிகமாகவும், குறுகிய காலத்தில் உற்பத்தி கிடைக்கவும் உணவுப்பொருட்களிலும் வேதிப்பொருட்கள் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

சிலர் வேலை, கல்வி நிறுவனங்களுக்கு செல்கிறோம் என காலை உணவை தவிர்க்கிறார்கள், பலர் உடம்பை குறைக்க தவிர்ப்பதாக கூறுகிறார்கள். பணம் எப்படி முக்கியமோ அதை விட உடல் நலனை காப்பது முக்கியம். உடல் நன்றாக இருந்தால் தான் பணத்தை அனுபவிக்க முடியும். உடல் நலனை பேண சத்தான சரி விகித சமமான நேரத்திற்கு உணவு உண்பது அவசியம் என்கிறார்.

பிரபலங்களுக்கு டயட் அட்வைஸராக இருப்பதுடன் சமூக வலைதளம் மூலம் பொதுமக்களுக்கும் டயட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.இன்று பெண்கள் எல்லா துறையிலும் சாதித்து வருகின்றனர்.

தொடர்ந்து பேசிய அவர் ,இந்த துறைக்கு வருவேன் என எதிர்பார்க்கவே இல்லை. சாப்பாடு என்றால் எனக்கு அத் துப்பிடி. எல்லா உணவு வகை களையும் விடமாட்டேன். டிகிரியில் நியூட்ரிஷியன் படிப் பில் சேர்ந்தேன். அப்போது கூட ஈடுபாடு ஏற்படவில்லை.

அதில், பட்டமேற் படிப்பு படித்த போது தான் இத்துறை மீது ஈர்ப்பு ஏற்பட்டது .பிறகு தான் எது நல்ல உணவு, எது கெட்ட உணவு, எதை தவிர்க்க வேண்டும் போன்ற விஷயங்கள் தெளிவாகின.

படிப்பை முடித்த கையுடன் உணவு விஷயத்திலும் கட்டுப்பாடுகளை பின்பற்ற துவங்கினேன். இது எனது உடல் நலனை பேண உதவியது. மற்றவர்கள் உடல்நலனையும் பேண சமூக வலைதளங்கள் மூலம் டயட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கினேன். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது . சில சினிமா, அரசியல் பிரபலங்கள் தங்களுக்கு டயட் ஆலோசனை வழங்க கேட்டனர். அப்படி அவர்களுக்கு நான் அட்வைஸரானேன்.

தற்போது ,பெரும்பாலான மக்கள் உடம்பை குறைக்கிறேன் என்பதற்காக காலை உணவை தவிர்க்கின்றனர். அதை முதலில் கை விட வேண்டும்; காலை உணவு அவசியம். காலை உணவை எடுக்காமல் மதியம் அதிகளவு எடுத்து கொள்வதால் உடல் எடையை குறைக்க முடியாது.இன்று பலரும் உணவு சாப்பிடுவதில் அக்கறை காட்டாததால் நோய் தாக்கு தலுக்குள்ளாவதை அறிய முடிந்தது.

உணவு வழக்கங்களை இன்று நாம் கடைபிடிப்பதில்லை. ஆனால் வெளிநாட்டினர் நம் முன்னோர் உணவு பழக்க வழக்கங்களை பின்பற்ற துவங் கியுள்ளனர். இப்போது தான் நம்மில் பலருக்கு விழிப்பு ணர்வு ஏற்பட்டுள்ளது. முடிந் தளவுக்கு பாக்கெட், பாஸ்ட் புட்களை தவிர்ப்பது நல்லது.

பழங்களை சாறு எடுத்து எடுத்து கொள்ளாமல் அப் படியே சாப்பிடுவது நல் லது. சிலருக்கு தண்ணீர் குடிக்க தோன்றாது. அவர்கள் பாட்டிலில் தண்ணீர் எடுத்து நம் முன் வைத்து கொண்டால் போதும். அதிலிருந்து எடுத்து கொள்ள தோன்றும்.

சுவர் இருந்தால் சித்தி ரம் வரைய முடியும். நாம் நல்ல உடல் நலத்துடன் இருந்தால் தான் சம்பா தித்ததை அனுபவிக்க முடியம். உடல் நலன் காக்க உணவு கட்டுப்பாடு அவசியம். இதை எல்லோரும் புரிந்து கொண்டால் ஆரோக்கியமான உலகை படைக்க முடியும்”இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version