மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மதுரையில் நடந்த கூட்டத்தில், “2026 தமிழ்நாடு தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்கும்” என்று அறிவித்தார்.
ஆனால் இதே விஷயத்தில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னதாக, “அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்” என்று கூறியிருந்தார்.
இந்த இரண்டு மாறுபட்ட கருத்துகளே தற்போது அதிமுக-பாஜக இடையே குழப்பம் ஏற்பட காரணமாகியுள்ளன. பழனிச்சாமி நினைப்பது, அதிமுக தான் முதன்மை. பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிமுக தலைமையில் இணைவது வேண்டும் என்பதே. ஆனால் அமித்ஷா கூறுவது, இரு கட்சிகள் சமமாக இணைந்து ஆட்சி அமைக்கும் என்பது போல் தோன்றுகிறது.
இதனால் அதிமுகவினர் சிலர் கடுமையான அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதேசமயம், தேமுதிகவும் பாமகவும் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்காத நிலையில் 2026 தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் NDA கூட்டணியில் குழப்ப நிலை தற்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்,நாளை இது தொடர்பாக அதிமுக தலைமை பாஜக தலைமையிடம் பேச உள்ளனர் என தகவல் பரவி வருகிறது. கூட்டணி முடிவு செய்து அறிவித்த பிறகு குழப்பம் ஏற்பட்டால் அதை தீர்க்க முடியவில்லை என்றால் கூட்டணியில் பின்னடைவு ஏற்படும் என்பது எழுதப்படாத விதி.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் அமித்ஷா இருக்கிறாரா அல்லது அமித்ஷா கட்டுப்பாட்டில் அதிமுக கூட்டணி அமைத்ததா என்கிற தெளிவு பிறந்துவிடும்.
– சமரன் (பத்திரிக்கையாளர்)