Site icon No #1 Independent Digital News Publisher

எந்தச் சிறையிலும் சாதிப் பாகுபாடு காட்டக் கூடாது – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

 

தமிழ்நாட்டில் உள்ள எந்தச் சிறையிலும் சாதிப் பாகுபாடு காட்டக் கூடாது என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறைகளில் சாதி ரீதியிலான பாகுபாடு கூடாது என தமிழ்நாடு சிறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில், சிறைகளில் புதிய கைதியை அடைக்கும் போது, அவர்களின் ஜாதி தொடர்பான எந்த விபரங்களையும், சிறை அதிகாரிகள் விசாரிக்கவோ, பெறவோ, பதிவு செய்யவோ கூடாது என்றும் கைதிகளின் ஜாதி குறித்த விபரங்கள், பதிவேட்டில் பராமரிக்கப்படக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, கைதிகள் அவர்களின் ஜாதி அடிப்படையில் வகைப்படுத்தப்படவில்லை என்பதை, சிறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் சிறைகளில் எந்த வேலையையும், கைதிகளின் ஜாதி அடிப்படையில் ஒதுக்கக்கூடாது எனவும் சிறைகளில் உள்ள, கழிவுநீர் தொட்டியை, ஆட்கள் வைத்து கைகளால் சுத்தம் செய்யக் கூடாது எனவும் இயந்திரங்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version