Site icon No #1 Independent Digital News Publisher

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி !

 

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது.

ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பிரீட்ஸ்கே 12 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 37 பந்தில் 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி அதிரடியாக ஆடி 54 ரன்னில் வெளியேறினார். இறுதியில், பெங்களூரு அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு முன்னேறியது

Exit mobile version