Site icon No #1 Independent Digital News Publisher

படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா !

 

சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.

பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘படை தலைவன்’.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த படத்திற்கு இளையராஜாவின் பின்னணி இசை கவனம் மக்களை ஈர்த்துள்ளனர்.
படை தலைவன் படத்தில் யானைக்கும் மனிதனுக்கும் இருக்கும் பாசப் போராட்டமாக உருவாகியுள்ளதாக ட்ரெய்லர் உணர்த்துகிறது.

மேலும்,ட்ரெய்லரின் இறுதியில், “ நீ தங்க கட்டி சிங்க குட்டி” என்ற ‘பொட்டு வைச்ச தங்க குடம்’ பாடல் வரிகள் இடம்பெறுள்ளது அதுமட்டுமின்றி,விஜயகாந்தின் கண்களை மட்டும் காட்டும் இறுதி ஷாட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும்,படை தலைவன் படத்தில் சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்துக்கு ‘படை தலைவன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதை, வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இயக்குகிறார்.

விஜே கம்பைன்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் வழங்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

திரைக்கதை, வசனத்தை பார்த்திபன் தேசிங்கு எழுதியுள்ளார். கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது .

Exit mobile version