“என் மண் என் மக்கள்” யாத்திரை தனிப்பட்ட முறையில் திரு.அண்ணாமலைக்கு வேண்டுமானால் அது ஒரு பிரபலத்துவத்தை உண்டாக்குமே தவிர தமிழ்நாடு பாஜகவுக்கு அது எந்த ஒரு முன்னேற்றத்தையும் கொண்டு வராது.
ஒரு மதத்தையோ ஜாதியையோ அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய எந்த ஒரு அரசியல் கட்சியும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பது மிகவும் கடினம். இதே அண்ணாமலை அவர்கள் திராவிட கட்சிகள் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவருடைய எதிர்காலமே வேறு. ஆனால் அண்ணாமலை அவர்களின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தமிழ்நாட்டு அரசியலில் ஏதோ ஒரு தாக்கத்தை நிச்சயம் உண்டாக்கும். அவர் களத்தில் இறங்கி மக்களோடு மக்களாகப் பயணித்து வருகிறார் நாளை அவர் பாஜகவிலிருந்து விலகினாலும் கூட அவருக்கென்று ஒரு தனி கூட்டம் இருக்கும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முதல் முறை வாக்களிப்பவர்கள் எல்லோரும் மனதிலும் அண்ணாமலை முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறார் ஆனால் அவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமே வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்படுகிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் தமிழகத்தை கைப்பற்றி விடலாமென நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம். தனிப்பட்ட முறையில் அண்ணாமலை அவர்களின் முயற்ச்சி வீணாகிக் கொண்டு இருப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
– ஆசிரியர் சமரன்