AI-யின் கையில் வருங்காலம்: இசைத்துறையின் புதிய பாதையை சுட்டிக்காட்டும் அனிருத்
சென்னை | சிறப்பு செய்தி
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகளாவிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் எதிர்கால தாக்கம் குறித்து இசையமைப்பாளர் முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
AI ஒரு அற்புதமான தொழில்நுட்பமாக உருவெடுத்து வருகிறதென்றாலும், அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே அதன் உண்மையான மதிப்பை தீர்மானிக்கிறது என்று அனிருத் குறிப்பிட்டார்.
“ஒரே ஒரு குரலில் பாடினாலே, அதையே 100 பெண்களின் குரலில், வெவ்வேறு Pitch-களில் மாற்றி உருவாக்க முடிகிறது. இது இசைத்துறையின் எதிர்காலம்,” என அவர் விளக்கினார்.
தற்போது AI இசைத்துறையில் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், எதிர்காலத்தில் அனைவரும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்றும், இது இசை உருவாக்கம், தயாரிப்பு மற்றும் பரவல் முறைகளையே மாற்றும் திறன் கொண்டது என்றும் அனிருத் தெரிவித்தார்.

